பாரத் நெட் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தொழில் முனைவோருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராமங்களுக்கு 1ஜிபிஎஸ் வேக நெட் சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, முதல்கட்டமாக 960 கிராமங்களில் அந்த சேவையை
ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில் முனைவோர், கேபிள் ஆபரேட்டர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.