கிரிக்கெட் வீரர் நடராஜன், பஞ்சாப் அணியில் இருந்தபோது ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் இளம் வயதிலேயே பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்கள் என்பதால், அவர் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.