2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் இந்திய ஸ்டார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 7வது இடம் பிடித்துள்ளார்.
இந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல ஹர்திக் முக்கிய காரணமாக இருந்தார்.
அதைப்போல் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய (uncapped) வீரர் ஷஷாங்க் சிங் 9வது இடத்தில் உள்ளார்.