விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக சீன மொழியில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தை சீனர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சீன ரசிகர்களை கவரும் வகையில் ‘மகாராஜா’ படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குப்பை தொட்டியின் நினைவாக, பட டிக்கெட் உடன் ஒரு அழகான சின்ன குப்பை தொட்டியை கொடுக்கிறார்கள்.