ஓணம் பண்டிகையின் போது தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்க அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைத்தே கோலத்தை தொடங்குவர். முதல் நாள் ஒரு வகை, 2ஆம் நாள் 2, 3ஆம் நாள் 3 என 10ஆம் நாள் 10 வகையான பூக்களால் கோலத்தை அழகுபடுத்துவார்கள்.
அத்தப்பூ இடுவதற்காக தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை அதிகம் பயன்படுத்துவர்.