பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மொத்தம் 538 எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுகள் உள்ளன.
இதில் 270க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்திய நேரப்படி இன்று மாலை 5.30க்கு வாக்குப்பதிவு தொடங்கும்.