மதகஜராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை விரல் நடுங்கிய வீடியோ வெளியானது. இதையடுத்து வைரஸ் காய்ச்சல் என்று தனியார் ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஹாஸ்பிட்டலில் விஷால் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஷாலின் மேலாளரோ இதை மறுத்துள்ளார்.
இதையடுத்து விஷாலுக்கு உண்மையில் என்ன ஆனது? அவர் எங்கிருக்கிறார்? என அவரின் ரசிகர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.