திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் உறுதி அளித்துள்ளது.
திருப்பதி கோயில் வரலாற்றில் இதுபோல் இதுவரை நடந்ததில்லை என்றும் தேவஸ்தானம் வருத்தம் தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விரிவான தகவலை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வெளியிடுவார் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.