‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மறுத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாக் அஸ்வின் கதை சொல்லும்போது நடிக்க மறுத்ததாகவும், சாவித்ரி கதாபாத்திரத்தை தன்னால் திரையில் கொண்டு வர முடியுமா என்ற பயம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.