சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் தேவசம்போர்டு திணறி வருகிறது. ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களில் 10,000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், தினமும் 25,000 பேர் வரை பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
90,000 பக்தர்கள் வந்தால் பிரச்னை இல்லையென கூறும் போலீசார், ஒரு லட்சம் பேர் வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.