பான் இந்தியா நட்சத்திரமான நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பின் போது காயமடைந்தார்.
இதன் காரணமாக ஜன.3ம் தேதி ஜப்பானில் வெளியாக உள்ள ‘கல்கி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால் தன்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.