97 பந்துகளில் 201 ரன்கள் 23 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் திரிபுரா, உ.பி. மோதின.
இதில் உ.பி. வீரரான CSK முன்னாள் வீரர் சமீர் ரிஸ்வி 97 பந்தில் 201 ரன்கள் விளாசி, உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். 20 சிக்சர், 13 பவுண்டரி அடங்கும்.
சமீபத்தில் நடந்த IPL ஏலத்தில் அவரை டெல்லி ரூ.95 லட்சத்துக்கு வாங்கியது. 2024இல் CSK ரூ.8.4 கோடிக்கு வாங்கியது.