ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செமீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் 47 செமீ கனமழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையில் 18 செமீ, கடலூரில் 18 செமீ, செய்யாறில் 16 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் கொலப்பாக்கத்தில் 12 செமீ, சென்னை மீனம்பாக்கத்தில் 11 செமீ என மழை பதிவாகியிருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.