ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தி.நகர், வடபழனி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளித்த நிலையில், மழைநீரை அகற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
நேற்றிரவுக்கு மேல் சென்னையில் பெரிய அளவில் மழை இல்லாததால், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.