பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காத ஆளுநர், சில கருத்துகளை கூறிவிட்டு அமர்ந்தார். தொடர்ந்து, சபாநாயகர் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையறிந்த ஆளுநர், அவையை புறக்கணித்து சென்றார். இந்நிலையில், இன்று அரசு தயாரித்த உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.