Direct to Device – D2D என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை BSNL வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம் வருங்காலங்களில் ஆடியோ, வீடியோ கால் பேச சிம்கார்டுகள் தேவைப்படாது. D2D என்பது ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோளுடன் இணைக்கும் தொழில்நுட்பமாகும்.
காடுகளில் சிக்கிக் கொண்டாலோ, இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டாலோ இந்த புதிய டெக்னாலஜி பேருதவியாக இருக்கும்.