தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார்.
ரோடு ஷோ நடத்தியதாக கூறுவது சரியல்ல எனவும், அனுமதியின்றி சென்றதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுடன் எவ்வித சர்ச்சையையும் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக, கூட்ட நெரிசலில் பெண் பலியானதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என ரேவந்த் குற்றஞ்சாட்டியிருந்தார்.