பொங்கல் விடுமுறை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் என 4 நாள்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.