‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழகத்தில் மையம் கொண்ட இசைப்புயல், இன்றும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ராஜா மயக்கத்தில் இருந்த ரசிகர்கள், “சின்ன சின்ன ஆசை…” என்ற மெல்லிய தொடுதலில் மெய்சிலிர்த்து போனார்கள்.
ஆஸ்கர் விருது, தேசிய விருது, கிராமி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கையில் ஏந்தி, ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று.