மாணவிகள் தன்னை அப்பா.. அப்பா.. என்று அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக CM ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார்.
பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், புதுமைப்பெண் திட்டம் குறித்து எடுத்துரைத்த போது கண்கலங்கியதோடு, இந்த பாச உணர்வே முக்கியம் என்றார்.
மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.