மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூரில் ஜனவரி 16இல் நடைபெறும் இந்த போட்டிக்கான பணிகளுக்குப் பந்தக்கால் நடப்பட்டது.
ஜன.14இல் அவனியாபுரம், ஜன.15இல் பாலமேடு, ஜன.16இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்’ மைதானத்தில் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.