18ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 21ஆம் தேதி தொடங்கும் நிலையில், இறுதி போட்டி மே 25ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மகளிர் ப்ரீமியர் லீக் நடத்தப்படும் தேதிகள் குறித்து இறுதி கட்ட ஆலோசனைகள் நடந்து வருவதாக BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கு வீரர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், வரும் 18-19ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.