அசாமில் 10 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆனது.
சீனாவில் உருவான இந்த வைரஸ் குழந்தைகளையே அதிகம் தாக்கி வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ள போதிலும், அடுத்தடுத்து குழந்தைகள் பாதிக்கப்படுவது மக்களைப் பதற்றமடையச் செய்வதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.