தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மார்ச்சில் இருந்து விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்தும் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.