இன்று காலை 10 மணியளவில் மணிப்பூருக்கு மிக அருகே மியான்மர் நாட்டு எல்லைக்குள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் தாக்கம், மணிப்பூர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது. ரிக்டர் அளவுகோளில் 5.1ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 127 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
இன்று காலை சிலி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவற்றால் பாதிப்பு ஒன்றும் இல்லை.

