அண்ணா பல்கலை. வன்கொடுமை சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
‘யார் அந்த சார்’ என அதிமுகவினர் கேட்பதை குறிப்பிட்டு பேசிய அவர், முதலில் நீங்க பொள்ளாச்சி சாரை கண்டுபிடிச்சீங்களா என கேள்வியெழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதை இபிஎஸ் இத்தோடு நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் எனவும் எச்சரித்தார்.