விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2,000 நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ளது. இதனை உயர்த்தி வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் 2 மாதம் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.