SA அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெறும் 42 ரன்களுக்கு SL ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் 2 பேர் மட்டுமே 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். 4 பேர் சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில், 5 பேர் டக் அவுட் ஆகினார்.
இது, டெஸ்ட்டில் SL-வின் மிக குறைந்த ரன்கள் ஆகும். தெ.ஆப்., அணியில் அட்டகாசமாக பந்து வீசிய மார்கோ ஜான்சன் 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டை கைப்பற்றினார்.