2024ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு என சர்வதேச வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் 2015 பருவநிலை ஒப்பந்தம் முதல்முறையாக மீறப்பட்டுள்ளது.
அதாவது, 1800இல் தொழில்புரட்சி தொடங்குவதற்கு முன்பிருந்த புவியின் வெப்பநிலைக்கும் தற்போதைய வெப்பநிலைக்கும் உள்ள வேறுபாடு 1.5 டிகிரிக்குள் இருக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் ஒப்பந்தம் செய்தன.
ஆனால், கடந்த ஆண்டு 1.6 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.