படத்தின் டீசர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சுமார் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
அர்ஜுன், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த 28ஆம் தேதி வெளியானது. 2025 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று படம் வெளியாக உள்ளது.