விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையலின் பகுதி, பச்சை கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அணிகலன்கள், சுடுமண் உருவ பொம்மை, வட்டச் சில்லு, தங்கமணிகள் என 3,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன.
5000 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழரின் அழகுணர்வு, கலாசாரத்தை இவை பறைசாற்றுகின்றன.