சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908” என்ற அவரது நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
தனது வாழ்த்துச் செய்தியில் திருநெல்வேலி கலகம் என பொதுவாக கூறப்பட்டதை, ‘திருநெல்வேலி எழுச்சி’ என
அழைத்ததற்காகவே எழுத்தாளர் ஆ.இரா. வெங்கடாசலபதியை பாராட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.