சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
128 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் பழுதுபார்க்கும் பணி தாமதமானதால், பயணிகளை வேறு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.