தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நதியில் வெள்ளம் பேருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பக்தர்கள் யாரும் பம்பை நதியில் இறங்கவோ, நீராடவோ வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல, பக்தர்கள் இரவு நேரங்களில் மலை ஏறுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.