இந்தியாவில் சென்னை, கோவை உள்பட பல நகரங்களில், மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
‘டீம் லீஸ் எட்-டெக்’ நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, டெல்லி மற்றும் சென்னையில் அதிகபட்சமாக மருத்துவப் பணியாளர்களை வேலைக்கு சேர்க்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த துறையில் 47% நிறுவனங்கள், டெலி ஹெல்த் மற்றும் நோய் தடுப்பு சேவைகளின் முன்னேற்றம் காரணமாக அதிக
வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.