அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் A.I. பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆய்வுகள் தற்போது நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். A.I. தொழில்நுட்பத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது.
அந்தத் தொழில்நுட்பத்தை அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.