காரைக்குடியை சேர்ந்த சிவானந்தம்(44). இவரது பேஸ்புக் பக்கத்தில் வாட்ஸ்அப் லிங்க் மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை நம்பிய அவர் கடந்த ஜூலை-செப்டம்பர் வரை 5 தவணைகளில் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளார்.
ஆனால் பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. இந்நிலையில், சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.