கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் EPS மற்றும் சசிகலாவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அவர்களை விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீலகிரி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனையடுத்து, மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.