ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என பல இடங்களில் கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள்.
அமலாக்கத் துறை சோதனைக்குப் பயந்துதான் திமுக, அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை என சாடினார். மேலும் விஜய் எனது தம்பி” என்றார்.