543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இதனை நடைமுறைப்படுத்த வெளியுறவு அமைச்சகம், தபால் துறை இணைந்து திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்டல அளவிலேயே ஆவண சரிபார்ப்பு மையம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.