மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், “எல்லாரும், எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு” என்ற வாசகத்துடன் கூடிய டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.