திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தனது ஆளுநர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்திற்கு சென்றுவிடலாம் என ஆசைப்படுவதாக கூறினார்.
மேலும், தானும், தனது மனைவியும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட ஆளுநர், உலகுக்கே உணவு கொடுப்பவர்கள் விவசாயிகள் எனவும் புகழாரம் சூட்டினார்.