இந்தியா- ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் ஏவுகணையை இந்தோனேஷியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது 23,870 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இதுபோக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளுக்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.