புதுச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிட்டலில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே ஒரு சிறுமி தொற்றால் பாதிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பிய நிலையில், மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், நாடு முழுவதும் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே, TNல் 2 குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.