கோதுமையை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
அதன்படி, மொத்த விற்பனையாளர்களுக்கு 2,000 டன்னிலிருந்து 1000 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சில்லறை வணிகர்கள் 5 டன் மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கோதுமையை பதுக்கி செயற்கையாக விலையேற்றத்தை ஏற்படுத்தும் செயலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.