சென்னையில் அதி கனமழை இருக்காது, ஆனால் கனமழை இருக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இன்று மாலை, இரவு முதல் மழை தீவிரமடையும் எனவும் 2 நாள்களுக்கு கனமழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, காலையில் இருந்து சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. பல இடங்களில் காலை முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?