தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தொலைவை ஃபெஞ்சல் புயல் மிக மெதுவாக கடந்துள்ளது.
பொதுவாக புயல்கள் 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் 250 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை பயணிக்கும். புயல்கள் உருவான 3ஆவது நாளில் வலுவிழக்கும்.
ஆனால், இந்த புயல் 3 கி.மீ. வேகத்தில்தான் பயணித்தது. இதனால், 500 கி.மீ. தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக்கொண்டது. இதுவே அதிக மழை பொழிவுக்கு காரணம்.