ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு, இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.