பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக PM மோடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா தலைமையில் பிரிக்ஸ் மாநாடு, காசான் நகரில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக மோடி ரஷ்யா செல்கிறார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் போர் நடக்கும் நிலையில், 2024இல் ரஷ்யாவுக்கு மோடி செல்வது இது 2ஆவது முறையாகும்.
மாநாட்டின் இடையே பிரிக்ஸ் தலைவர்களை சந்தித்து பேசலாம் எனக் கூறப்படுகிறது.