இதுவரை 3 மனிதர்களுக்கு மூளையில் சிப் பொறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
2025ல் 20- 30 பேருக்கு சிப் பொறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதன் மூலம் கை, கால்களை இழந்தவர்கள் செல்போன், கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பார்வை இழந்தவர்களுக்கான சாதனத்தை உருவாக்கி, அவர்களை மீண்டும் கண் பார்வையை வழங்குவதுதான் தங்களது அடுத்த இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.